Wednesday, September 23, 2009

நாம்!

நான்!
என் வீடு!
என் வீதி!
இதனைதாண்டி யோசிக்க
என் சிந்தனை அத்தனை பெரிதல்ல!

என் காதுகளுக்கு
வெடிச்சத்தம் கேள்காதவரை
தீவிரவாதி அவனை
எனக்கு பயமில்லை!

என் கிணற்றுநீர்
கலங்காதவரை
தொழிற்சாலை கலிவுநீர்
எனக்கு ஒரு பொருட்டில்லை!

என் தோட்டத்தில்
மரம் எதற்கு
வெப்பம் கூட நுழையாத
என் வீட்டில்
நிழல் எதற்கு!
அணிலும் காக்கையும் திண்ணும்
கனியெதற்க்கு!
இயற்கையும் தேவையில்லை எனக்கு!

கறைப்பட்ட அரசியல்வாதியை
தேர்ந்துயெடுக்க
என் விரலில் நான்
கறையிட மாட்டேன்!

நான் உன்னையும்
நீ என்னையும்
நீ என்றுதான் அழைப்போம்!
நாம் என்று எத்தனைமுறை அழைத்தோம்!
எப்போது அழைப்போம்!

நம் சுயநலத்தில்
பொதுநலம் கலக்கவேண்டிய
நேரம் இது!

நம் வீதியை தாண்டிய
வாழ்கையை பார்க்கவும்
நம் பேரனை தாண்டிய
தலைமுறை பார்க்கவும் வேண்டும் இனி!

இல்லையில்!வரண்ட பூமியில்
விதைவிதைத்து மழைகாய்
காத்துயிருக்கும் விவசாயியுடன்
ஒரு நாள் நீயும் நானும்!

-விஷ்ணு

No comments: